தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வான நரிப்பள்ளி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

அரூர்: திருப்பத்தூரில் கடந்த மாதம் இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் தேசிய அளவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான மாணவிகளை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது.

இதில் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்துக்கு உட்பட்ட நரிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவிகள் எஸ்.ஜமுனா, ஜி.பேபி ஷாலினி, வி.தமிழரசி, வி.சுவாதி ஆகியோர் பங்கேற்றனர். இதில், சிறப்பாக விளையாடிய 4 மாணவிகளும் தேசிய பெண்கள் அணியில் விளையாட நேரடியாக தகுதி பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட மாணவி களுக்கான போட்டி குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் நடைபெற உள்ளது.

அப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவி களுக்கான வழியனுப்பு விழா நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர்சகுந்தலா தலைமையில் நடந்தது. இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரி யர்கள், பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்று மாணவிகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக, போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு தேவை யான விளையாட்டு உபகரணங்கள், அழகு அரூர் காப்போம் அமைப்பு சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது,