அமெரிக்கா: 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜூன் 9-ம் தேதி நடக்கிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தப் போட்டி ஜூன் 29-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவுபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் அனைத்து லீக் போட்டிகளுமே அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் ஃப்ளோரிடா நகரில் இரவு 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெற உள்ளது.
க்ரூப் சுற்று: இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியையும், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியையும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவுடனும், ஜூன் 15-ம் தேதி கனடாவையும் எதிர்கொள்ள இருக்கிறது. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26-ம் மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-ல் ஜூன் 29-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
Get ready for the ultimate cricket carnival in the West Indies and the USA
Unveiling the fixtures for the ICC Men’s T20 World Cup 2024 #T20WorldCup | Details
— ICC (@ICC) January 5, 2024