சென்னை: ஒய்நாட் ஸ்டூடியோஸ் சார்பில், காதலில் சொதப்புவது எப்படி? தமிழ்ப்படம், காவியத் தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா உட்பட பல படங்களைத் தயாரித்தவர் சஷிகாந்த். இவர் ‘டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இதில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக சஷிகாந்த் தெரிவித்துள்ளார்