ஆப்பிள் விஷன் புரோ ஹெட்செட் விரைவில் அறிமுகம்: 19-ம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்

கலிபோர்னியா: ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் விரும்பிகள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆப்பிள் விஷன் புரோ ஹெட்செட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். வரும் 19-ம் தேதி முதல் இந்த சாதனத்துக்கான முன்பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கேட்ஜெட்கள் சூழ் உலகில் இந்த சாதனம் பயனர்களின் வரவேற்பை பரவலாக பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச அளவிலான டெவெலபேர்ஸ் மாநாட்டில் இது அறிமுகம் ஆனது. கேமிங் மற்றும் வீடியோ கன்டென்ட் சார்ந்த பயனர் அனுபவத்தில் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான மெய்நிகர் திரை அனுபவத்தை இது வழங்கும் என ஆப்பிள் உறுதி அளித்துள்ளது.

ஆப்பிளின் எம்2 சிப், 256ஜிபி ஸ்டோரேஜ், விஷன் ஓஎஸ் எனும் இயங்குதளம் மூலமாக இது இயங்குகிறது. பயனர்கள் தங்களது கண்கள், குரல் மற்றும் கைகள் மூலமாக இந்த சாதனத்தை கன்ட்ரோல் செய்யலாம். இதில் கேமரா, மைக்ரோபோன் மற்றும் சென்சார்கள் உள்ளன. இதன் தரவுகளை ப்ராஸஸ் செய்ய ஆர்1 என்ற சிப் இதில் உள்ளது. 4கே டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) என பயனர்கள் இதில் அக்சஸ் செய்யலாம். வரும் பிப்ரவரி முதல் இந்த சாதனம் பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் 3,499 டாலர்கள். இந்தியாவில் இந்த சாதனம் விற்பனை குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்காவில் முதல் விற்பனை தொடங்குகிறது.

'+divToPrint.innerHTML+'