Last Updated : 10 Jan, 2024 12:20 AM
Published : 10 Jan 2024 12:20 AM
Last Updated : 10 Jan 2024 12:20 AM
சென்னை: இந்திய சந்தையில் மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் 5ஜி நெட்வொர்க் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது ‘ஜி’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன்.
சிறப்பு அம்சங்கள்
- 6.5 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள்
- 5,000mAh பேட்டரி
- டைப்-சி யுஎஸ்பி போர்ட்
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதள அப்டேட்டும் இந்த போனில் அறிவிக்கப்பட்டுள்ளது
- மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இதன் விலை முறையே ரூ.10,999 மற்றும் ரூ.11,999 என அறிவிக்கப்பட்டுள்ளது
- வரும் 17-ம் தேதி முதல் சந்தையில் விற்பனை தொடங்குகிறது
Go ‘Wow’ with #MotoG345G. It offers #FastNWow 5G performance, the Segment’s Fastest processor Snapdragon® 695, a Vegan leather design, & more.
Starting at ₹9,999 (Inc. exchange offer)*
Sale starts 17th January on @Flipkart , & at retail stores.
*T&C Apply pic.twitter.com/Tajf6ZoQyZ
— Motorola India (@motorolaindia) January 9, 2024
FOLLOW US
தவறவிடாதீர்!
நன்றி
Publisher: www.hindutamil.in