சென்னை: கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளனர்.
‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 18-ம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிது.
இதையடுத்து, இந்தப் படத்தில் மேலும் சில நடிகர்கள் இணைந்துள்ள அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஜெகமே தந்திரம், மதுரம், ஜோசப் போன்ற படங்கள் மூலமாக புகழ்பெற்ற மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இந்தப் படத்தில் இணைகிறார். இதேபோல், கவுதம் கார்த்திக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Welcome onboard #JojuGeorge & @Gautham_Karthik to the magnificent ensemble of #ThugLife
#Thuglife #Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @abhiramiact #Nasser @MShenbagamoort3 @RKFI… pic.twitter.com/Vcs4S0b8PG
— Raaj Kamal Films International (@RKFI) January 10, 2024