வாய்ப்ப உட்றக்கூடாது.. | அசோக் செல்வன், சாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. வரும் 25-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் பிராதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டை சார்ந்துள்ளது படத்தின் கதைக்களம். கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

ட்ரெய்லர் எப்படி? 2.39 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ட்ரெய்லரின் ஆரம்ப காட்சியே கிரிக்கெட் மைதானம் தான். கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டுமென துடிக்கும் எளிய பின்புலம் கொண்ட இளைஞர்கள் அதற்காக மேற்கொள்ளும் முயற்சியாக அடுத்தடுத்த காட்சிகள் நகர்கின்றன. காதல், குடும்பம், கிரிக்கெட் விளையாட்டில் புறக்கணிப்பு, பக்கம் இருப்பவர்கள் கொடுக்கும் நம்பிக்கை வார்த்தைகள் என ட்ரெய்லர் நிறைவடைகிறது.

வீடியோ லிங்க்..