‘மெட்ராஸ்காரன்’ மூலம் தமிழில் நடிகர் ஷேன் நிகாம் அறிமுகம்!

சென்னை: மலையாள நடிகர் ஷேன் நிகாம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். ‘மெட்ராஸ்காரன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ஜெகதீஸ் தயாரிக்கிறார்.

கதை என்ன? – ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். சிறு சம்பவம் பெரும் பிரச்சினையாக, மாறி இருவர் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லும் படமாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அறிவிப்பு வீடியோ:

Unmasking The Star From Mollywood To Kollywood | Shane Nigam | #Madraskaran

'+divToPrint.innerHTML+'