மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.25 – 31

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.25 - 31

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் குரு – சுக ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – பாக்கியஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன் – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 27-01-2024 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எந்த முயற்சியும் வெற்றி பெறும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். வீடு மனை யோகம் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் நீங்கும்.

தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேலதிகாரிகள் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருக்கும் மன வருத்தம் நீங்கும்.

பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு ஏற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: தினமும் முன்னோர்களை வணங்கி வரவும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சமஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்ரன் – பாக்கியஸ்தானத்தில் சூர்யன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 27-01-2024 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மற்றவர்கள் மூலமாக நன்மைகள் நடைபெறும். வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

பரிகாரம்: அம்மனை வணங்க மனகவலை நீங்கும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் – பாக்கியஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 27-01-2024 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். வாகன யோகம் ஏற்படும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வணங்க குடும்பம் சுபிட்சமடையும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:



– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

'+divToPrint.innerHTML+'