திப்ருகர்: குத்துச்சண்டையில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புதன்கிழமை (ஜன. 24) அன்று இந்த அறிவிப்பு வெளியானது. சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி காரணமாக அவர் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
“பாக்சிங் ரிங்குங்குள் விளையாடும் ஆர்வம் எனக்குள் அப்படியே உள்ளது. ஆனாலும் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் வயது வரம்பு சார்ந்த விதி காரணமாக நான் அதை தொடர் முடியாது. 40 வயது வரை மட்டுமே ஆடவர் மற்றும் மகளிர் குத்துச்சண்டையில் விளையாட முடியும்.
வயது வரம்பு முடிந்துவிட்டதால் என்னால் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் விளையாட விரும்புகிறேன். ஆனால், வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நான் ஓய்வு பெறுகிறேன்” என நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்தார். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம், 5 முறை ஆசிய சாம்பியன் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.
குத்துச்சண்டை மட்டுமல்லாது விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் இந்தியாவின் இளம் விளையாட்டு வீராங்கனைகளுக்கு மேரி கோம் தான் இன்ஸ்பிரேஷன். அவரை போல சாதிக்க வேண்டுமென்ற பெருங்கனவுடன் பலர் பயிக்கி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.