மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த இளம் வீரர் ஜன்னிக் ஷின்னர். ரஷ்யாவின் மெத்வதேவை அவர் இறுதிப் போட்டியில் வீழ்த்தி இருந்தார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜன்னிக் ஷின்னர் மற்றும் மெத்வதேவ் பலப்பரீட்சை மேற்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் ஷின்னர் வெற்றி பெற்றார்.
ஷின்னர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது இத்தாலி நாட்டு வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பட்டம் வென்ற இள வயது வீரருக்கான பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார்.