Last Updated : 29 Jan, 2024 10:25 PM
Published : 29 Jan 2024 10:25 PM
Last Updated : 29 Jan 2024 10:25 PM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 12 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ரியல்மி 12 புரோ+ 5ஜி போனும் அறிமுகமாகி உள்ளது.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி 12 புரோ 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
ரியல்மி 12 புரோ 5ஜி
- 6.7 இன்ச் ஃபுல்-ஹெச்டி+ AMOLED டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 50 + 32 + 8 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமரா பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது
- முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட கேமரா இடம்பெற்றுள்ளது
- 5,000mAh பேட்டரி
- 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி கேபிள்
- பிப்ரவரி 6-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை தொடங்க உள்ளது
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
- இந்த போனின் தொடக்க விலை ரூ.25,999
- ரியல்மி 12 புரோ+ 5ஜி போனின் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது
When SRK met #realme12ProSeries5G!
It’s a tale of portrait master and romance ka Badshah and we are all swooning in on the results. #BeAPortraitMaster
Know more: pic.twitter.com/WB7WVbfjDU
— realme (@realmeIndia) January 29, 2024
FOLLOW US
தவறவிடாதீர்!
நன்றி
Publisher: www.hindutamil.in