பான் இந்தியா படமாக உருவாகும் ‘சர்தார் 2’

சென்னை: கார்த்தி, ராஷி கண்ணா, லைலா உட்பட பலர் நடிப்பில் உருவான படம், ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து, இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிப்.2-ம் தேதி ‘சர்தார் 2’ படத்துக்கான பூஜை போடப்படுகிறது.

கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் பான் இந்தியா முறையில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இதில் மற்ற மொழி நடிகர், நடிகைகளும் நடிக்க இருக்கின்றனர். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி, இப்போது பிரேம்குமார் இயக்கும் படத்தில்நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மதுரை அருகே நடந்து வருகிறது. நலன் குமாரசாமி இயக்கும் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.