சென்னை: பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஓஜி’ தெலுங்கு படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ (Saaho) படத்தை இயக்கியவர் சுஜீத். இவர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘ஓஜி’. இந்தப் படத்தில் கோலிவுட், பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், ப்ரியங்கா மோகன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் இப்படம் பிரமாண்டமாக உருவாக உள்ளது. பவன் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ப்ரோ’ படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The #OG will arrive on 27th September 2024. #TheyCallHimOG #OGonSept27th pic.twitter.com/4PZTUZe2db
— DVV Entertainment (@DVVMovies) February 6, 2024