ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படப் பணிகள் தொடக்கம்

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே23’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது ‘தர்பார்’. இப்படத்துக்குப் பிறகு 3 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த முருகதாஸ் தற்போது தனது புதிய படத்தை தொடங்கியுள்ளார். ‘எஸ்கே23’ என அழைக்கப்படும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.

படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான 17-ம் தேதி வெளியிடப்படும் என தெரிகிறது. மோகன்லால், வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆக்‌ஷன் என்டர்டெயினராக படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.