மும்பை: கடந்த 15-ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மிகுந்த மகிழ்ச்சியாலும், அன்பினாலும் எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன. கடந்த பிப்ரவரி 15-ம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வாமிகாவின் குட்டித் தம்பிக்கு அகாய் (Akaay) என பெயரிட்டுள்ளோம். எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசியையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி – அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டனர். அண்மையில் வாமிகாவின் 3வது ஆண்டு பிறந்தநாளை தம்பதியினர் கொண்டினர். இந்நிலையில் தற்போது அவர்களுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.