பொதுப்பலன்: திருமணம், தாலிக்கு பொன் உருக்க, சீமந்தம் செய்ய, வியாபாரம் தொடங்க, வாகனம் வாங்க, புது பதவி ஏற்க, ரத்தினங்கள் அணிய, பயணம் தொடங்க, பழைய நண்பர்களை சந்திக்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெறலாம். மனக் குழப்பம், பதற்றம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயாசம் செய்து நிவேதனம் செய்வது அதிக நன்மை தரும்.
மேஷம்: உங்களிடம் இருக்கும் மனச் சோர்வு நீங்கும். உற்சாக மாக புது முயற்சிகளில் இறங்குவீர். குழப்பம் நீங்கி கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும்.
ரிஷபம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.
மிதுனம்: அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: பழைய சம்பவங்கள் மகிழ்ச்சி தரும். அரசால் அனுகூலம் உண்டு. வீண் விவாதங்களை தவிர்க்கவும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சில வேலைகள் இழுபறியாகி முடியும். புதிய வாகனம் வாங்குவீர்.
சிம்மம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்பு கிடைக்கும்.
கன்னி: குடும்பத்தில் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். அடிக்கடி பழுதான வாகனம் சரியாகும்.
துலாம்: முகப்பொலிவு கூடும். கணவன் – மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கலை பொருட்கள் சேரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்: புது முயற்சிக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர். யாருக்கும் உத்தரவாதம் தர வேண்டாம். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். எதிர்பாராமல் பணம் கிடைத்து கடன் பிரச்சினை தீரும்.
தனுசு: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைய வேண்டியது இருக்கும். முன்கோபத்தை தவிர்த்து உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. அக்கம் பக்கத்தினரை அனுசரித்துப் போகவும்.
மகரம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை தருவர். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்கள் விலகும்.
கும்பம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. மன இறுக்கம் நீங்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
மீனம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |