துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது – என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம். தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறிநிலை மாறும். வீண் பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரும். பயணங்கள் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டு படிப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கடன் பிரச்சனை சொத்து தகராறு தீரும்.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – பஞ்சம ஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். பிடித்தமான காரியங்களை செய்து மனநிறைவடைவீர்கள். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதில் தைரியம் கூடும்.
குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். குழந்தைகளால் பெருமை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். மாணவர்களுக்கு உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வணங்க பிரச்சினைகள் தீரும். மனோ தைரியம் கூடும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – சுக ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி நன்மதிப்பு பெறுவீர்கள். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.
கணவன், மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கான ஆரம்ப விஷயங்கள் இனிதே நடைபெறும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கடன் பிரச்சினை தீரும்.
அரசியல்வாதிகளுக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். பணவரத்து அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சக மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்க பணவரத்து கூடும். காரிய தடைகள் விலகும். தொழில் சிறக்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |