திருமலையில் 24-ம் தேதி பவுர்ணமி கருட சேவை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் இரவு கருட சேவை நடத்தப்படுவது ஐதீகம்.

சந்திரனுக்குரிய திருத்தலம் என்பதால், பவுர்ணமியன்று இரவு கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்நிலையில், வரும் 24-ம் தேதி பவுர்ணமியையொட்டி, திருமலையில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடைபெற உள்ளது. இதனை காண திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.