மார்ச் 22 முதல் போட்டியில் சென்னை Vs பெங்களூரு – ஐபிஎல் 2024 அட்டவணை வெளியீடு

மும்பை: 2024 ஐபிஎல் தொடருக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களூரு.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டங்களில் தான் ஐபிஎல் டி 20 தொடரின் போட்டிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐபிஎல் அட்டவணை முழுவதுமாக அறிவிக்கப்படாமல், மார்ச் 22 – ஏப்ரல் 7ம் தேதி வரை நடக்கும் 21 போட்டிகளுக்கான கால அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணையும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களூரு. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

மார்ச் 23-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் – டெல்லி அணிகளும், இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகளும் மோதுகின்றன. மார்ச் 24-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் – லக்னோ அணிகளும், இரண்டாவது ஆட்டத்தில் குஜராத் – மும்பை அணிகளும் மோதுகின்றன.

'+divToPrint.innerHTML+'