மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – தொழில் ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்: 14-03-2024 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-03-2024 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-03-2024 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 02-03-2024 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அறிவுத்திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம், கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதிநுட்பத்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும்.
திருவாதிரை: இந்த மாதம் தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சினைகள் தீரும். பண கஷ்டம் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 07, 08 | அதிர்ஷ்ட தினங்கள்: 01, 02, 27, 28, 29
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |