‘கைதி 2’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: கார்த்தி அளித்த அப்டேட்

சென்னை: ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரில் இன்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி, “டில்லி சீக்கிரம் திரும்பி வருவான். அடுத்த வருடம் நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். நானும் இப்போது ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களை முடித்து விடுவேன். லோகேஷும் ‘ரஜினி 171’ படத்தை முடித்துவிட்டு ‘கைதி 2’க்குத்தான் வருவார் என்று நினைக்கிறேன். சீக்கிரம் வருகிறோம்” என்று அப்டேட் கொடுத்தார்.

முன்னதாக, கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் ‘96’ பட புகழ் இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே ‘சர்தார் 2’ உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.