Last Updated : 04 Mar, 2024 11:20 PM
Published : 04 Mar 2024 11:20 PM
Last Updated : 04 Mar 2024 11:20 PM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எஃப்15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி எஃப் வரிசையில் எஃப் 15 போன் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.5 இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 6100+ ப்ராஸசர்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 50 + 5 + 2 மெகாபிக்சல் என ட்ரிபிள் கேமரா
- செட்-அப் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது
- 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 6,000mAh பேட்டரி
- 25 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்
- 4ஜிபி வேரியண்ட் போனின் விலை ரூ.12,999
- 6ஜிபி வேரியண்ட் போனின் விலை ரூ.14,499
- விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
Ab Sun mein bhi Fun with #GalaxyF15 5G’s segment only sAMOLED Display. Starting at ₹11999*. Get notified: https://t.co/uhL5iIyy8h. #AbIndiaKaregaFun #Samsung pic.twitter.com/NxRWbNvjbl
— Samsung India (@SamsungIndia) March 4, 2024
FOLLOW US
தவறவிடாதீர்!
நன்றி
Publisher: www.hindutamil.in