நடிகை த்ரிஷா, அஜித்தின் ‘விடாமுயற்சி’, கமலின் ‘தக் லைஃப்’ படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இதையடுத்து அவர் சிரஞ்சீவி ஜோடியாக ‘விஸ்வம்பரா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 18 வருடங்களுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர்.
பேன்டஸி த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை வசிஷ்டா இயக்குகிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கியத்துவம் கொண்ட இரட்டை வேடத்தில் த்ரிஷா நடிக்கிறார். மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும் சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத், சிரஞ்சீவிக்கு சகோதரிகளாகவும் நடிக்கின்றனர். முன்னதாக, 2018-ல் வெளியான ‘மோகினி’ படத்தில் த்ரிஷா 2 வேடங்களில் நடித்திருந்தார்.