டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

செய்திப்பிரிவு

Last Updated : 14 Mar, 2024 06:16 AM

Published : 14 Mar 2024 06:16 AM
Last Updated : 14 Mar 2024 06:16 AM

அஸ்வின்

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் தரவரிசை பட்டியலில் 870 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 847 புள்ளிகளுடன் 2-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜடேஜா 788 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் தொடர்கிறார். குல்தீப் யாதவ் 15 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை அடைந்துள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 இடங்கள் முன்னேறி 751 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தரம்சாலா போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசியதால் தரவரிசையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 859 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்விஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தையும், ஷுப்மன் கில் 11 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!




Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *