நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் அமிதாப் பச்சன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

81 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் உள்ளார். அவரது காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருக்கு நடிகர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது தொடர்பான எந்த அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர், நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘கல்கி 2989 ஏடி’ படத்திலும், ரஜினி நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.