பீகாரில் நேற்று இரவு 18 பேருடன் சென்ற படகு சரயு ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் சரண் பகுதியில் நேற்று இரவு 18 பேருடன் சென்ற படகு சரயு ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேரை காணவில்லை. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து பேர் சிகிச்சையில் உள்ளனர், அதே நேரத்தில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒன்பது பேர் நீந்திக் கரைக்கு வந்தனர், இரண்டு பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காணாமல் போனவர்களும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும், இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். எனினும், மீட்புப் பணிகள் இரவு முதல் தொடர்ந்து வருகிறது.
நேற்று மாலை 6.30 மணியளவில் மாஞ்சி தொகுதியில் உள்ள மாட்டியார் காட் அருகே படகு கவிழ்ந்ததில் இந்த சம்பவம் நடந்ததாக சரண் மாவட்ட ஆட்சியர் அமன் சமீர் தெரிவித்தார். மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது, இறந்தவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம், என்றார்.
கடந்த சில மாதங்களில் மாநிலத்தில் படகு கவிழ்ந்த இரண்டாவது பெரிய சம்பவம் இதுவாகும். செப்டம்பர் 14 அன்று, முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாக்மதி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூழ்கி உயிரிழந்தனர். முதல்வர் நிதிஷ் குமார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய வந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: 1newsnation.com