திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகில் மிக பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். ஒரு நாளைக்கு இந்த கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அதில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களும் உள்ளனர். மேலும் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் பக்தர்களும் உள்ளனர். மேலும் அவரவர் வசதிக்கு தகுந்தவாறு காணிக்கையும் செலுத்தி பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
எனவே 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவிலில் நடைபெறும் 300 தரிசன கட்டணம், அங்கபிரதட்சணம், மற்ற கட்டண சேவைகள் என அனைத்திற்கும் டிக்கெட்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதியை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வழக்கமாக, இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் கட்டண தரிசன டிக்கெட்கள் வெளியிடப்படும். எனவே 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இந்த மாதம் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை நடைபெற இருக்கிறது. இச்சேவைகளில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு டிக்கெட் வழங்கப்படும். இந்த மாதம் 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் 20ஆம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தானத்தின் வெப்சைட் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் கம்ப்யுட்டர் மூலம் குலுக்கல் நடத்தப்பட்டு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும். குலுக்கல் மூலம் டிக்கெட் கிடைத்த பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் 22ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆன்லைனில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
Also Read >> 20% தீபாவளி போனஸ் தமிழ்நாடு ஊழியர்களுக்கு… போக்குவரத்து கழகத்தின் கோரிக்கை…
அதேபோல் ஜனவரி மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் பிரம்மோற்சவம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர அலங்காரசேவை ஆகியவற்றிற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தான வெப்சைட்டில் இம்மாதம் 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி மாதம் ஏழுமலையானுக்கு அங்க பிரதட்சணம் செய்ய நினைக்கும் பக்தர்கள் இந்த மாதம் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து டோக்கனை பெற்று கொள்ளலாம்.
அதேபோல் தலா 10,000 ரூபாய், 500 ரூபாய் கட்டணத்தில் ஸ்ரீ வாணி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை இம்மாதம் 23 ஆம் தேதி காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி மாதம் ஏழுமலையானை வழிபட விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த மாதம் 23 ஆம் தேதி மாலை 3 மணி முதல் இலவசமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக இருக்கும் அறைகளில் ஜனவரி மாதம் தங்க விரும்பும் பக்தர்கள்
இந்த மாதம் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
மேலும் டிசம்பர் மாதம் ஸ்ரீவாரி சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இந்த மாதம் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கும், டிசம்பர் மாதம் நவநீத சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் மதியம் 12 மணிக்கும், டிசம்பர் மாதம் உண்டியில் பணம் கணக்கிடும் சேவையை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு அன்று மாலை 3 மணிக்கும் தேவஸ்தான வெப்சைட் மூலம் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in