முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இச்சம்பவத்தை துரதிஷ்டமானது என்று குறிப்பிட்டதோடு, என்ன நடந்தது என்ற விபரம் அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் அசோக் சவான், ”மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், நர்ஸ்கள் இல்லை. பலர் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். அவர்களுக்கு பதில் வேறு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
இயந்திரங்கள் பல இயங்கவில்லை. 500 நோயாளிகள் சிகிச்சை பெறவேண்டிய மருத்துவமனையில் 1,200 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, “இந்த உயிரிழப்புகளுக்கு மூன்று எஞ்சின் அரசுதான் பொறுப்பு” என்று குற்றம் சாட்டினார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் முதல்வர் ஷிண்டேயின் சொந்த ஊரான தானேயில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com