நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் தீபாவளி விடுமுறை தொடங்குகிறது. நாளை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வகையில் நவ.13ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறையுடன் மக்கள் தீபாவளியை கொண்டாட உள்ள நிலையில், இன்று அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நன்றி
Publisher: 1newsnation.com