இந்திய விமான நிலையங்கள் ஆணையம்(AAI) நடப்பு ஆண்டிற்கான வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலையத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலையில் சேர்ந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடம் காலியாக உள்ளதாகவும், அதில் மொத்தம் 490 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் BE/B.Tech, MCA முடித்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்.
ALSO READ : டைரக்ட்டா இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க – சென்னையில 75 பணியிடங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது
Junior Executive வேலைக்கு விண்ணப்பிக்க 27 வயது வரை இருக்கலாம். GATE 2024 அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வாகும் நபருக்கு மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை பெற்றுக்கொள்ளலாம். அப்ளிகேசன் பீஸ் எதுவும் கட்ட தேவையில்லை. ஆன்லைன் வழியாக இந்த வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான தொடக்கத் தேதி ஏப்ரல் 2, 2024 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி மே1,2024 ஆகும். இந்திய விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படும் வேலை ஆட்கள் இந்தியா முழுவதும் பணியாற்றலாம்.
மேலும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க வேண்டுமானால் Official Notification க்ளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in