கரூர் அருகே, ஐம்பது வயது மூதாட்டியை, அவருடைய கள்ளக்காதலன் அடித்து கொலை செய்த விவகாரம், கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூரை அடுத்துள்ள, அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ரூபிதாபானு(50). இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தினார். இவருடைய மகள் திருமணமாகி, குடும்பத்தோடு, வெளியூரில் வசித்து வருகிறார். இத்தகைய நிலையில் தான், கணவர் உயிரிழந்த பிறகு ரூபிதா பானுவுக்கு, ராஜேந்திரன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
ஆகவே, ரூபிதா மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அந்த வகையில், இன்று காலை ரூபிதாவை சந்திப்பதற்காக, அவருடைய வீட்டிற்கு ராஜேந்திரன் வருகை தந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்பு, இந்த வாக்குவாதம், கைகளப்பாக மாறிய நிலையில், ராஜேந்திரன், ரூபிதாவை கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது.
இதில், கீழே விழுந்த ரூபிதாவுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், கோபம் குறையாத நிலையில், ராஜேந்திரன், ரூபிதாவை அடித்தே கொலை செய்திருக்கிறார். இதனால், ரூபிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த வெங்கமேடு காவல்துறையினர், ராஜேந்திரனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com