மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில், இம்மாத தொடக்கத்தில் 35 நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். நாண்டெட் மட்டுமல்லாது ஔரங்காபாத் அரசு மருத்துவமனையிலும், ஒரே நாளில் 12 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு டாக்டர்கள் மற்றும் மருந்து பற்றாக்குறைதான் காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. நாண்டெட் மருத்துவமனையை பார்வையிட வந்த சிவசேனா எம்.பி.ஹேமந்த் பாட்டீல், மருத்துவமனயின் டீனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தார். இதனால் ஹேமந்த் பாட்டீல் மீது மருத்துவமனை டீன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் ஹேமந்த் பாட்டீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நோயாளிகள் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவனையின் டீனுக்கு எதிராக போலீஸார் கொலைக்கு நிகரான வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேசமயம் மருத்துவமனை டீன் டாக்டர் வகோடே அளித்த பேட்டியில், “‘நோயாளிகளை சரியாகத்தான் கவனித்துக்கொண்டோம். டாக்டர்கள் அல்லது மருந்துக்கு எந்த வித தட்டுப்பாடும் இல்லை. மருத்துவமனைக்கு வருபவர்கள் பல்வேறு கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனிக்கவில்லை” என்றார்.
இதற்கிடையே அரசு மருத்துமனைகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் கிடைக்காமல் போனதற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சாவந்த் தான் காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அமைச்சர் சாவந்த் மருந்துகள் கொள்முதலுக்கு சரியான நேரத்தில் கமிட்டி அமைத்து இருந்தால் மருந்து பற்றாக்குறை இருந்திருக்காது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com