Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
தமிழகத்தின் பிரபலமான ஒரு பல்கலைக்கழகமான பாரதியார் பல்கலைக்கழகம், அந்த பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் guest facility பணிகளுக்கான ஆறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், master degree PHD NET, SLET போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற நபர்கள், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி உள்ளவர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணியில் சேர விரும்புவர்களின் வயதுவரம்பு பற்றி தெரிந்து கொள்வதற்கு, இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 25000ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள், நேர்காணல் மூலமாக வரும் 19.9.2023 அன்று தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள.
இந்த பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வரும் 18/9/2023 அன்று மாலைக்குள் bucuic2020@buc.edu.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The post பாரதியார் பல்கலைக்கழகத்தில், 25000 ரூபாய் சம்பளத்தில் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு….! தேர்வு இல்லை…! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com