Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
சைவ உணவை விட அசைவ உணவை விரும்புபவர்களேஅதிகம். அதிலும் ஞாயிற்று கிழமை வந்தாலே காலையில் முதல் வேலையாக கடைக்கு சென்று கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவது பலரின் வழக்கம். அப்படி பலர் விரும்பும் உணவாக இருப்பது கோழிக்கறி தான். புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிடாமல் ஏங்கி கிடந்த மபலர், புரட்டாசி முடிந்ததும் அசைவ உணவு சாப்பிடுவது அதிகமாகியுள்ளதால் தற்போது கோழிக்கறியின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக கறிக்கோழியின் விலை உயர்ந்துள்ளது. நாமக்கல்லில் கடந்த வாரம் கறிக்கோழி 1 கிலோ (உயிருடன்) ரூ.97ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.104 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நாட்களில் விலை உயர்ந் நிலையில் நேற்றைய தினம் விலை உயராமல் இருந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று கிலோவுக்கு ரூ.2 அதிகரித்து விற்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை போன்ற நகரங்களில் கோழிக்கறியின் விலை இன்று அதிகரித்துள்ளது.
The post இன்று சிக்கன் வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com