மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கத் தவறியதோடு, ராஜஸ்தானிலும் ஆட்சியை பா.ஜ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது. இதனால், தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உத்தரகாண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத், கோவா, அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க, தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸிடம் ஆட்சியைப் பறித்திருக்கிறது. மேலும், மத்தியப் பிரதேசத்திலும் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.
5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதால், இனி இந்தி பேசக்கூடிய 12 மாநிலங்களிலும் பா.ஜ.க மட்டுமே ஆட்சியில் இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இமாச்சல பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது.
நன்றி
Publisher: www.vikatan.com