பீகாரில் மாநிலக் கல்வித்துறை, கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் பள்ளிக்கு சரிவர வராத 20,90,020 மாணவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய 2.66 லட்சம் மாணவர்களும் அடங்குவார்கள். இதனால் பீகார் அரசு ஏற்கனவே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், அனுமதியின்றி, பணிக்கு வராமல் இருக்கும் 2,081 ஆசிரியர்களின் சம்பளத்தை கல்வித்துறை பிடித்தம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 590 ஆசிரியர்களின் சம்பளத்தை குறைப்பதற்காகவும் பரிந்துரை செய்யப்பட்டு அணுகப்பட்டுள்ளது. மேலும், 49 ஆசிரியர்களை இடைநீக்கம் செய்யவும், 17 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பீகார் அரசு தொடர்ந்து விமர்சனங்களை சந்திக்கிறது.
நன்றி
Publisher: 1newsnation.com