பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்.
பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்து அவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் பல்வேறு படங்கள் குணச்சித்திர நடிகனாக நடித்துள்ளார், இதில் முக்கியமாக உயிருள்ளவரை உஷா, கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் உயிருள்ளவரை உஷா அவரது முதல் படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குணச்சித்திர பாத்திரங்கை ஏற்று அதிகம் நடித்தவர்.
1983-ஆம் ஆண்டில் ரி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற “உயிருள்ள வரை உஷா, பி.மாதவனின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான “கரையைத் தொடாத அலைகள்”, விசுவின் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு வெளியான ‘மீண்டும் சாவித்திரி”, 1986-ஆம் ஆண்டில் வெளியான “லட்சுமி வந்தாச்சு”, ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் 1991-இல் வெளிவந்த ‘’அம்மா பிள்ளை’’ போன்ற பல படங்களிலும், சின்னத்திரை, நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவு திரைப்படங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com