இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்துக்கு முழுக்க அரசியல் காரணம்தான் என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீமான், “நடிகர் விஜய் நடித்த `லியோ’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்கவில்லை. இத்தனை காலம் அவரின் முந்தைய இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அனுமதி கிடைத்தது. ஆனால் இந்த முறை ஏன் அனுமதி கிடைக்கவில்லை? என்ன காரணத்திற்காக கிடைக்கவில்லை. காவல்துறை முன் ஆய்வு செய்து அனுமதி கொடுத்து இருக்கலாமே. கேட்டால் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை காரணம் காட்டுகிறார்கள். அவரின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெருக்கடியை காரணம் காட்டுகிறார்கள். இதெல்லாம் நம்பும் விதமாகவே இல்லை. கண்டிப்பாக அவரின் நிகழ்ச்சிக்கு அரசியல் அழுத்தம் உள்ளத!” என்றார்.
மேலும், “நேரு உள்ளரங்கில் பாதுகாப்பு போடலாமே. நீங்கள் அரசியல் சந்திப்பில் பல ஆயிரம் பேரை அழைக்கிறீர்கள். அப்போது பிரச்னை இல்லையா? அப்போது பாதுகாப்பு பிரச்னை இல்லை என்றால் இப்போது எங்கிருந்து வந்தது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு பாடல் வெளியீட்டு விழா நடந்ததே. அதற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள். அதற்கு எப்படி பாதுகாப்பு கொடுத்தீர்கள். அங்கே பாதுகாப்பு பிரச்னை இல்லையா? ஏன் விஜய்யை இப்படி செய்கிறீர்கள். ரஜினிக்கு ஒரு நியாயம் விஜய்க்கு ஒரு நியாயமா? உரிய பாதுகாப்பு கொடுக்கவே காவல்துறை உள்ளது. நீங்கள் நடத்தவே கூடாது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும். நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக பெரிய நெருக்கடி கொடுக்கப்படுகிறது, அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என தெரிந்தே விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது, லியோ இசை வெளியீட்டு விழா ரத்துக்கு அரசியலே காரணம். இந்த செயல் கண்டிக்கத்தக்கது!” என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com