
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான “சீதா ராமன்” படத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை தன்வசப்படுத்தியவர்தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தொலைக்காட்சி தொடர் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். இந்த நடிகை இந்திய மற்றும் தெலுங்கு படங்களில் மூலம் நடித்து மிகவும் பிரபலமானவர். நடிகை மிருணாள் தாகூர் தமிழ் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
Also Read > ஆண்கள் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம் – நம்ம தமிழகத்தில் வேலை
இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூர் மும்பையில் உள்ள ஒரு பகுதியில் ரூ.10 கோடிக்கு வீடு வாங்கி உள்ளார். இந்த வீட்டின் அருகே உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்பினை நடிகை கங்கனா ரனாவத்தின் அவர்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாங்கியுள்ளார்.
நடிகை மிருணாள் தாகூர் மும்பையில் ரூ.10 கோடிக்கு வாங்கிய வீட்டை தனது தந்தையுடன் சேர்ந்து கடந்த ஜனவரி 25 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். இவர் வாங்கிய வீடு 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in