தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகை இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையாக உள்ளது. இதுபோன்ற பண்டிகை நாட்களில் படிப்புக்காகவும் வேலைக்காவும் வெளியூர் மற்றும் வெளிமாநிலம் சென்ற மக்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். பொதுவாகவே பண்டிகை நாட்களில் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில், இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள் எந்தவித சிரமம் இன்றி சென்று வரவும் அவர்களின் நலனுக்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
Also Read : ஊழியர்களுக்கு வரப்போகும் தீபாவளி போனஸ்..! இனிமே என்ன ஒரே கொண்டாட்டம்தான்!!
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது குறித்து வருகிற 28 ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிடும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கியதை போன்று இந்த ஆண்டும் அதே அளவு சிறப்பு பேருந்தை இயக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கேகே நகர் ஆகிய இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் போக்க்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in