வாக்னர் கூலிப்படையால் கட்டமைக்கப்பட்ட உலகளாவிய தொடர்பை ரஷ்யா முன்னெடுத்துச் செல்லும் என்றே கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படையானது சிரியா, லிபியா, மாலி ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்றிருப்பதாகவும், பதிலுக்கு தங்கச் சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்களையும் கட்டுப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படை ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருவதால், அதன் செயல்பாடுகள் நீடிக்கும் என்றே ஒரு அதிகாரி கூறியதாக கூறப்படுகிறது.
மேலும், வாக்னர் கூலிப்படையின் ஜூன் கிளர்ச்சிக்கு (June mutiny) பிறகு ஆப்பிரிக்காவில் வாக்னரின் இருப்பை வலுப்படுத்த ப்ரிகோஜின் தனது முயற்சிகளை தீவிரப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது ரஷ்ய அதிபர் புதினால் ஆதரிக்கப்படவில்லை என்றும் வாக்னர் கூலிப்படையின் செயல்பாடுகளை கைப்பற்ற இன்னொரு கூலிப்படையை உருவாக்க புதின் ஆலோசனை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com