மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு பா.ஜ.க. கூட்டணி அரசில் அஜித் பவார் தலைமையிலான ஒரு பிரிவினர் சேர்ந்தனர். அன்று முதல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அஜித் பவார் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சரத் பவார் இவ்விவகாரத்தில் அஜித் பவாரை தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசாமல் இருந்தார். ஆனால் அஜித் பவார் சமீப காலமாக சரத் பவாரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சி கூட்டத்தில் பேசிய அஜித்பவார் தான் சரத்பவார் சொல்லித்தான் பா.ஜ.க.வில் கூட்டணி வைக்க சென்றேன் என்று புதிய குண்டை தூக்கிப்போட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித் பவாரின் இக்குற்றச்சாட்டுக்கு சரத் பவார் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “‘அஜித் பவார் என்னை இது தொடர்பாக சந்தித்து பேசவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த கூட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்யவில்லை.
அவர்கள் என்னிடம் வந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் கொள்கை ரீதியாக பா.ஜ.க. மாறுபட்டு இருப்பதால் அவர்களுடன் கூட்டணி வைக்க சம்மதிக்க முடியாது என்று சொன்னேன். 2019-ம் ஆண்டு நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஓட்டுக்கேட்கவில்லை. தேர்தலுக்கு பிறகு எங்களது கொள்கையில் மாற்றம் செய்தால் அது மக்களை ஏமாற்றியதாகிவிடும்.
எனவே பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டேன். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது என்பது அஜித் பவாரின் அரசியல் முடிவு. அம்முடிவை 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அவர் எடுத்திருக்கவேண்டும். தேசியவாத காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டுவிட்டு தேர்தலுக்கு பிறகு மாறுவது சரியல்ல” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com