பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி நிறுவனங்கள் நிலவு குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமேரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அதிதீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் “சந்திராயன் 3” என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு சாதனை படைத்தது. அந்த வரிசையில், தற்பொழுது அமெரிக்கா நாட்டை சேர்ந்த விண்கலம் ஒன்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
Also Read > அரசு வேலையில் 240061 காலி பணியிடங்கள்- உடனே விண்ணப்பியுங்கள்
அமெரிக்காவின் ஹூஸ்டன் என்னும் நகரில் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமானது நிலவை ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. “ஒடிஸியஸ்” என்ற பெயர் கொண்ட இந்த விண்கலத்தை நாசா உதவியுடன் நிலவின் தென் துருவத்தில் அமெரிக்கா தரையிறக்கி உள்ளது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட “ஒடிஸியஸ்” என்ற விண்கலத்தில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பை தொட்ட முதல் விண்கலம் என்ற பெருமையும் இந்த விண்கலம் பெற்றுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவை சேர்ந்த விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கலத்தை தொடர்ந்து நிலவை ஆய்வு செய்ய மனிதர்களை அனுப்பும் நோக்கில் இந்த விண்வெளி ஆய்வு மையம் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in