Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னனூர் கிராமத்தில், கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் வீட்டிற்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
சின்னமனூர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் யார்? அவர்களின் ஊர் எது? என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
The post அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து..!! 3 பேர் பலி..!! இருவர் கவலைக்கிடம்..!! ஈரோட்டில் அதிர்ச்சி..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com