அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அசோசியேட் பணியிடத்தை நிரப்ப ஆட்கள் தேவைப்படுகிறதாம். இந்த பணியில் இரண்டே இடம் மட்டும் தான் காலியாக உள்ளது. அரசு பணியில் சேர ஆர்வம் உள்ளவர்ள் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அனைத்து தகுதிகளும் சரியாக உள்ளதா என பார்த்துவிட்டு உடனடியாக விண்ணப்பிக்கவும்.
ALSO READ : பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலையில் ஜாயின் பண்ண ரெடியா? அப்போ ஆப்லைன்ல விண்ணப்பியுங்க!
இந்த வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பதாரர்கள் ஆப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுதப்படுகிறார்கள். விண்ணப்பித்தவர்கள் தேர்வாகும் பட்சத்தில் அவர்கள் சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டியில் பணியில் சேரலாம். கல்வித்தகுதியாக ME/M.Tech முடித்தவர்கள் மட்டும் இதற்கு அப்ளை பண்ண தகுதியானவர்கள் ஆவார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அசோசியேட் பணிக்கு Written Exam எழுதியும், Interview வைத்தும் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளருக்கு மாத சம்பளம் என 32,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இந்த வேலையில் சேர வேண்டுமானால் அவர்களின் அதிகபட்ச வயது 45 ஆக தான் இருக்க வேண்டும்.
ஆப்லைன் மூலம் தபால் வழியாக அப்ளை செய்வதால் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.பிப்ரவரி 1,2024 ஆம் தேதி அன்று தான் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை சரியாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் பிப்ரவரி 15, 2024 முடிவதற்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Professor and Head,
Department of Automobile Engineering,
Madras Institute of Technology,
Anna University,
Chromepet,
Chennai-600044.
இந்த வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க Application Form ஓப்பன் செய்து படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். வேலை பற்றிய விவரங்களை Official Notification பார்க்கவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in