எதிர்வரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பெரும்பாலான மக்கள் தாங்கள் வேலை பார்க்கும் நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்குவார்கள். இந்த ஆண்டில், வரையறுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் இருப்பதால் சில மோசடிகள் நடக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக, அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற வாய்ப்பு உள்ளது. டிக்கெட் எதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த மோசடியாளர்கள் உங்களிடம் அந்த டிக்கெட்களை அதிக விலைக்கு பேசி விற்றுவிடுவார்கள்.
IRCTC இணையதளம் அல்லது ஆப் போன்ற அங்கீகரிக்கப்பட்ட மூலங்களிலிருந்து மட்டுமே டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். அவர்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும், அவர்களிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்காதீர்கள்.
டிக்கெட் விற்பனையாளர் உங்களை அணுகினால், பணிவுடன் மறுத்துவிட்டு வெளியேறவும். சந்தேகத்திற்கிடமான செயல்கள் இருப்பின் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் அடையாள அட்டையை கட்டாயம் காட்ட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மற்றவர்களின் பெயரில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை மோசடியாளர்களுக்கு மிகவும் கடினமாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே டிக்கெட் எடுக்கும் பயணிகள் தங்களுடைய ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) என்பது ரயில்வே டிக்கெட்டுகளின் முன்பதிவை நிர்வகிக்கும் அரசு நிறுவனமாகும். பயணிகள் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை எளிதாக்குவதற்காக IRCTC இணையதளம் மற்றும் செயலியின் செயல்திறனை அரசாங்கம் மேம்படுத்தியுள்ளது. இதன் வாயிலாகவே பெரும்பாலும் டிக்கெட் புக்கிங் செய்யப்படுகின்றன. அதேபோல, அன்ரிசர்வ்டு டிக்கெட்களுக்கு யுடிஎஸ் ஆப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.
நன்றி
Publisher: 1newsnation.com