வங்கி வேலைக்காக வெயிட் பன்ற எல்லாருக்குமே இது குட் நியூஸ்! பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது 94 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கு. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வங்கி வேலையில் சேருங்கள்!
SBI வேலைவாய்ப்பு விவரங்கள்
பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிற பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India – SBI) புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது வந்துள்ள அறிவிப்பின்படி, Resolver பணிக்காக 94 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
மேலும், கல்வித்தகுதியானது எஸ்பிஐ விதிமுறைகளின்படி இருக்க வேண்டும். 01/11/2023-இன் படி குறைந்தபட்சம் 60 மற்றும் அதிகபட்சம் 65 ஆண்டுகள் வயது வரம்பு இருத்தல் அவசியம். ஒவ்வொரு மாதமும் 40,000 முதல் 45,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள அனைவரும் 01/11/2023 முதல் 21/11/2023 வரை தவறாமல் விண்ணப்பியுங்கள். மேலும் விவரங்களை SBI Job Notification PDF லிங்கில் அறிந்துகொண்டு SBI Apply லிங்கில் உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in