வங்கி கடன் மோசடி!… ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது!… அமலாக்கத்துறை அதிரடி!

வங்கி கடன் மோசடி!… ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது!… அமலாக்கத்துறை அதிரடி!

கனரா வங்கியிடம் ரூ.538 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் (வயது 74), அவரது மனைவி அனிதா மற்றும் சில நிர்வாகிகள் கனரா வங்கியிடம் ரூ.538 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது. இது தொடர்பாக கடந்த மே மாதம் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினர் நரேஷ் கோயலுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் நரேஷ் கோயலை டெல்லியில் இருந்து மும்பை ஒர்லி பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல், அவரது மகள் நம்ரதா கோயல் மற்றும் மகன் நிவான் கோயல் ஆகியோருக்கு 2011-12 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு நோக்கங்களுக்காக JIL இன் கணக்குகளில் இருந்து 9.46 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது EY தணிக்கையில் தெரியவந்துள்ளது. “பரிவர்த்தனைகள் எந்த காரணமும் இல்லை மற்றும் தனிப்பட்ட ஆதாயங்கள் மற்றும் செறிவூட்டலுக்காக நிறுவனத்திடமிருந்து தொகையை திசை திருப்பும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது”

கோயலின் மனைவி அனிதாவுக்கு ரூ.7.39 கோடியும், மகள் நம்ரதாவுக்கு ரூ.1.1 கோடியும், மகன் நிவானுக்கு ரூ.97 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டது. 2010-11 மற்றும் 2011-12 வரை, நிவான் மற்றும் நம்ரதா ஆகியோர் ஜெட் நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சியாளர்களாக பணிபுரிந்தனர், அனிதா கோயல், வருவாய் மேலாண்மை மற்றும் நெட்வொர்க் திட்டமிடல் VP ஆக இருந்தார்.

நரேஷ் கோயலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு இரவில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நரேஷ் கோயலை ஆஜர்படுத்தினர். அவர் தொழிலுக்காக கனரா வங்கியில் வாங்கிய கடனை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாகவும், குறிப்பாக ரூ.9.46 கோடியை தனிநபர் கடனை செலுத்த பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் அவரிடம் விசாரணையை தொடர வேண்டியதிருப்பதால், தங்களது காவலில் ஒப்படைக்கும்படி கோரியது. இதனை ஏற்று நரேஷ் கோயலை வருகிற 11-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் ஒப்படைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்த நிலையில் அதன் சேவையை கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *