அண்மையில், நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பல்வேறு உணவு கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொணடனர்.
இந்நிலையில், திருப்பூர் – பெருமாநல்லூர் சாலை, பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சாலையோரம் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த பிராய்லர் கோழிகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இறந்த பிராய்லர் கோழிகளுக்கு, கேசரி பவுடர் உடன் மஞ்சள் சேர்த்து செயற்கை நிறமூட்டி, நாட்டுக்கோழி என விற்பனை செய்தது அம்பலமானது.
மேலும், விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி, மலர் இது போன்ற விற்பனையில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், நோய்வாய்ப்பட்டு இறந்து போன 22 கிலோ கோழி இறைச்சி பெனாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும், தரமான இறைச்சிகளை எவ்வாறு சோதனை செய்து வாங்குவது என்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நன்றி
Publisher: 1newsnation.com